ஐ.சி.சி. உறுப்பினர் அந்தஸ்தை இழந்த அமெரிக்கா.. அடுத்து என்ன?

ICC suspends USA Cricket board : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினர் அந்தஸ்தை அமெரிக்கா இழந்துள்ளது. ஐ.சி.சி உறுப்பினராக தனது கடமைகளை தொடர்ந்து மீறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: September 24, 2025 at 3:16 pm

துபாய், செப்.24, 2025: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் உறுப்பினர் அந்தஸ்தை அமெரிக்கா இழந்துள்ளது. ஐ.சி.சி உறுப்பினராக தனது கடமைகளை தொடர்ந்து மீறியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் யுஎஸ்ஏ பங்கேற்பதைப் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டின் தலைமை மற்றும் நிர்வாக கட்டமைப்பை மாற்றியமைக்க முயற்சித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், USA கிரிக்கெட்டை (USAC) இடைநீக்கம் செய்ய ஐ.சி.சி இறுதியாக முடிவு செய்துள்ளது.இந்த முடிவு செவ்வாய்கிழமை (செப்.23, 2025) நடந்த காணொலி கூட்டத்திற்குப் பிறகு ஐ.சி.சி வாரியத்தால் எடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த இடைநீக்கம் பிப்ரவரியில் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கும் T20 உலகக் கோப்பை அல்லது லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் தேசிய அணியின் பங்கேற்பைப் பாதிக்காது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : 50 பந்துகளில் சதமடித்த அழகிய ராட்சஷி ஸ்மிருதி மந்தனா.. ஆஸி பந்துவீச்சை நொறுக்கினார்!

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!
T20 World Cup

சென்னை சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்ளும் இந்தியா.. வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com