Congress spokesperson Shama Mohammed: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குண்டாக இருப்பதாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மகளிர் நிர்வாகிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
Congress spokesperson Shama Mohammed: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா குண்டாக இருப்பதாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மகளிர் நிர்வாகிக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
Published on: March 3, 2025 at 7:08 pm
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முகமத், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். மேலும் அவர் குண்டாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. மேலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உருவக் கேலியில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டுகள் இருந்தன.
இதற்கிடையில் சமா முகமதுவின் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் பாரியமும் ஆச்சிபம் தெரிவித்திருந்தது. இது குறித்து பிசிசிஐ தெரிவித்திருந்த கண்டனத்தில், ” இந்திய அணி அறஇருதிக்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில் பொறுப்பான ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்துக்கள் வருவது துரதிஷ்டவசமானது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த விவாகரத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருக்கு எதிராக கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சமா முகமதுக்கு, காங்கிரஸ் கட்சி சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
மேலும் காங்கிரஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ” இது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல; சம்பந்தப்பட்ட பதிவை நீக்க நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். மேலும் அவர் வருங்காலங்களில் கவனமாக பதிவிடவும் அவரிடம் தெரிவித்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ராயல் சேலஞ்ச் பெங்களூரு புதிய கேப்டன்.. ராஜத் படிதார் சொத்து மதிப்பு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com