Ganja case registered against IIT baba: நான் கஞ்சா புகைப்பேன்; நான் மட்டுமல்ல பல சாதுக்கள் கஞ்சா புகைப்பார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஐடி பாபா.
Ganja case registered against IIT baba: நான் கஞ்சா புகைப்பேன்; நான் மட்டுமல்ல பல சாதுக்கள் கஞ்சா புகைப்பார்கள் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஐஐடி பாபா.
Published on: March 3, 2025 at 6:04 pm
டெல்லி, மார்ச் 3, 2025:மகா கும்பமேளாவில் பிரபலமானவர்களில் ஒருவர் ஐஐடி பாபா. ஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்றுள்ள இவர் பின் நாட்களில் சாமியாராக மாறி உள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் சர்ச்சையாக பேசி வழக்குப்பதிவுக்கு உள்ளாகி உள்ளார்.
பேட்டி ஒன்றின் போது ஐஐடி பாபா தாம் கஞ்சா புகைப்பதாகவும் தான் மட்டுமல்ல தன்னைப்போல் பல சாதுக்கள் கஞ்சா புதைப்பார்கள் என்றும் கூறியிருந்தார். ஐஐடி பாபாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்கு ஐஐடி பாபா மீது பாய்ந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்த ஐஐடி பாபா, “என்னைப் பற்றி நிறைய பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள்; நான் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும் என்னைப்பற்றி ஏதோ ஒரு தகவலை பொய்யாக பரப்பி வருகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன தெரியுமா? என்னிடம் சிறிதளவு கஞ்சா இருந்தது. என் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போது நான் ஜாமினில் உள்ளேன்” என்றார். ஐஐடி பாபாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க டெல்லி தியேட்டரில் தீ.. அலறியடித்த ரசிகர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com