Shama Mohameds Post: ரோகித் சர்மா குண்டாக இருக்கிறார் என சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Shama Mohameds Post: ரோகித் சர்மா குண்டாக இருக்கிறார் என சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Published on: March 5, 2025 at 1:53 pm
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகம்மது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இம்முறை ஷாமா முகம்மது கண்ணில் விராட் கோலி சிக்கியுள்ளார்.
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ஷாமா முகம்மது விமர்சித்து இருந்தார். அவர் குண்டாக இருக்கிறார் என்றும் ரசிகர்களை ஈர்க்க முடியாத கேப்டன் எனவும் அவர் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அளித்த விளக்கத்தில், இது காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல. இதுபோன்று பேசக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பிலும் ஷாமா முகம்மதுவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில், முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் இதுபோன்ற பொறுப்பில்லாதனமாக பேசக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முன்னதாக 2018 நவம்பரில் விராட் கோலியை ஷாமா விமர்சித்துள்ளார். அப்போது விராட் கோலி மிகவும் மிகைப்படுத்தப்படுகிறார்.
நான் அவரிடம் எந்த புதிய திறமையையும் பார்த்தது இல்லை. இந்திய பேட்ஸ்மேன்களை காட்டிலும் எனக்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களை தான் பிடிக்கும் எனக் கூறினார் எனக் கூறப்படுகிறது.
இது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் காங்கிரஸ்காரர்களுக்கு இந்தியாவை பிடிக்கவில்லை. ஆனால், பாகிஸ்தானை பிடிக்கிறது எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க :குண்டான ரோஹித் சர்மா.. விமர்சித்த காங்கிரஸ் நிர்வாகி.. பி.சி.சி.ஐ கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com