பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024: ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவும் முன்னணி மைதானத்திற்கு வெளியே நடைபெறும்.

Published on: August 28, 2024 at 10:20 pm

2024 Paris Paralympics live streaming | பாரிஸ் பாராலிம்பிக்ஸ் 2024 தொடக்க விழா லைவ் ஸ்ட்ரீமிங்-ஐ, தொலைக்காட்சி, ஆன்லைனில் எப்படி காண்பது என்பது குறித்து பார்க்கலாம்.
ஒலிம்பிக் போட்டிகளைப் போலவே, பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவும் முன்னணி மைதானத்திற்கு வெளியே நடைபெறும்.

அந்த வகையில், ​​​​பாராலிம்பிக் தொடக்க விழா Champs-Elysees மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட் (Place de la Concorde) ஆகிய இரண்டு வரலாற்று இடங்களிலும் பாரிஸ் நகரத்தின் மிகப்பெரிய சுற்றுலா தலங்களிலும் நடைபெற உள்ளது.
பிளேஸ் டி லா கான்கார்ட் ஒலிம்பிக்கின் போது ஸ்கேட்போர்டிங், பிரேக்கிங் மற்றும் 3×3 கூடைப்பந்து நிகழ்வுகளுக்கான இடமாக இருந்தது. அடுத்த 11 நாட்களில் 22 விளையாட்டுகளில் 549 பதக்கங்களுக்காக 4400 விளையாட்டு வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.

தொடக்க விழா

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழா ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு IST இல் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவின் நேரடி ஒளிபரப்பு ஜியோ சினிமா (JioCinema) பயன்பாடு மற்றும் இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும், இந்தியாவில் உள்ள ரசிகர்கள் 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவை ஸ்போர்ட்ஸ் 18 நெட்வொர்க் மூலம் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.

இதையும் படிங்க யுவராஜ் சிங்கின் 17 ஆண்டுகால சாதனை; ஒரே ஓவரில் முடித்த டேரியஸ் விஸ்ஸர்

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com