Mahashivratri 2025 Astrology: சிவ பெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி 2025 பிப்ரவரி 26ஆம் தேதி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 12 ராசிகளின் பலன்கள் இங்குள்ளன.
Mahashivratri 2025 Astrology: சிவ பெருமானுக்கு உகந்த மகா சிவராத்திரி 2025 பிப்ரவரி 26ஆம் தேதி இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. 12 ராசிகளின் பலன்கள் இங்குள்ளன.
Published on: February 26, 2025 at 12:06 am
Updated on: February 26, 2025 at 1:30 am
மகா சிவராத்திரி 2025 ராசி பலன்கள்: இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி இன்று (பிப்.26, 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பது மற்றும் பூஜைகள் செய்வது என பக்தர்கள் ஈடுபடுவார்கள். இத்தினத்தில் சிவ பெருமானின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
தற்போது நாம் இந்நன்நாளில் 12 ராசிகளின் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மேஷம் மற்றும் விருச்சிகம்
மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களை செவ்வாய் ஆட்சி செய்கிறார். இது மகா சிவராத்திரி அன்று சிவபெருமானிடமிருந்து சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுகிறது. இவர்கள் வெல்லம் கலந்த நீர் மற்றும் ஏழு வில்வ இலைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.
ரிஷபம், துலாம்
சுக்கிரனால் ஆளப்படும் ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள், மகா சிவராத்திரி அன்று தங்கள் பிரார்த்தனைகளைச் செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளை பெறுகிறார்கள். இந்தப் புனித நாளில், இவர்கள் பால் மற்றும் தயிருடன் சிவலிங்கத்தை பூஜிக்க வேண்டும்.
மிதுனம், கன்னி
மிதுன, கன்னி ராசிக்காரர்கள் புதன் ஆதிக்கம் நிறைந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் கரும்புச்சாறு மற்றும் சந்தனம் தடவிய 5 வில்வ இலையை கொண்டு சிவபெருமானை பூஜிக்க வேண்டும்.
கடகம்
கடக ராசியை ஆளும் கிரகமான சந்திரன், சிவனின் நெற்றியில் அமர்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆகவே கடக ராசிக்காரர்கள் சிவனுக்கு நெய் அபிஷேகம் செய்யலாம்.
சிம்மம்
சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள், சிவபெருமானுக்கு தேன், நெய், கங்கா நீர் கொண்டு மகா சிவராத்திரி தினத்தில் சிவனை பூஜிக்கலாம்.
தனுசு, மீனம்
தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு, மகா சிவராத்திரி தினத்தில் குங்குமப்பூ அல்லது மஞ்சள் கலந்த பால் மற்றும் 21 வில்வ இலைகளை கொண்டு பூஜிக்க வேண்டும்.
மகரம், கும்பம்
சனி பகவானால் ஆளப்படும் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி தினத்தில், சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், பச்சை பால் மற்றும் கங்கா நீர் கொண்டு பூஜிக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: மகா சிவராத்திரி மற்றும் ராசிகளின் நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Maha Shivratri 2025: மகா சிவராத்திரி விரதம், பூஜிக்க உகந்த நேரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com