Mythology | நினைத்தாலே முக்தி; அக்னி தலம்: எங்கு அமைந்துள்ளது தெரியுமா?
Mythology | நினைத்தாலே முக்தி; அக்னி தலம்: எங்கு அமைந்துள்ளது தெரியுமா?
Published on: November 18, 2024 at 10:12 am
Mythology | தமிழ்நாட்டில் அமைந்துள்ளது திருவண்ணாமலை மாவட்டம். இது புனித நகரமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருஅண்ணாமலை நினைத்தாலே முக்தி என்ற சிறப்புக்குரிய தலமாக கருதப்படுகிறது. மேலும் ஈசன் ஜோதியாக நின்ற தலம் இதுவாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும் அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
இது ஏகன் அனேகன் ஆகி அநேகன் ஏகநாகி நின்ற தலம். பிரம்மன் மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த தலம். இங்கு மும்மூர்த்திகள் சேர்ந்து சிவபெருமானாக உருவெடுத்த தலம். ஈசன் அர்த்தநாரீஸ்வராய் காட்சியளித்த தலமாகும். சைவக் குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட தளம். விநாயகரின் அருள் படை வீடுகளில் முதல் படையாக கருத்தப்படும் தலம்.
அருணகிரிநாதர் திருப்புகழ் பாட முருகன் அடி எடுத்து கொடுத்த தலம். ஆதார தலங்களில் இது மணிபூரண தலம். பௌர்ணமி கிரிவளத்திற்கு பிரசித்தி பெற்ற தலம். கார்த்திகை தீபத்தின் மூல தலம். மலை உச்சியில் எரியும் மகா தீபத்தால் உலக புகழ் பெற்ற தலம் என பல பெருமைகளையும் சிறப்புகளையும் இத்தலம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : வாழை இலையில் விருந்து; ஒரு பக்கம் சோறு, மறுபக்கம் காய், கனி வைப்பது ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com