Mythology | மகாபாரத புராணம் பல அதிசயங்களை தன்னக்தே கொண்டுள்ளது என இன்றளவும் நம்பப்படுகிறது.
Mythology | மகாபாரத புராணம் பல அதிசயங்களை தன்னக்தே கொண்டுள்ளது என இன்றளவும் நம்பப்படுகிறது.
Published on: September 30, 2024 at 1:30 pm
Mythology | மகாபாரதத்தில் கர்ணனின் பிறப்பு வித்தியாசமானது. அவன் சூரிய புத்திரன். இந்தக் கர்ணன் மகாபாரத கதையில் முதன்மையான கதாபாத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார். அங்க நாட்டின் அரசரான இவரை போரில் வீழ்த்த அகிலத்தில் ஒருவர் கூட இல்லை என கிருஷ்ண பராமாத்வாவே கூறுகிறார். எனினும் வலிமை இருந்தும் கர்ணன் சோகக் கதாபாத்திரமாகவே மகாபாரத போரில் வருகிறார்.
அர்ஜூனை வெல்ல முழு தகுதி இருந்தும், அர்ஜூனன் கைகளால் கொல்லப்படுகிறார். குருச்சேத்திர போரில் பாண்டவர்கள் பக்கம் நில்லாமல் துரியோதனன் பக்கம் நிற்க தூய நட்புதான் காரணம். இந்த நட்பினால்தான் கர்ணனுக்கு அங்கதேசம் கிடைத்தது. அங்க தேசம் இன்றைய பீகார், உத்தரப் பிரதேசத்தை ஒட்டிய பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்த கர்ணன் 6 ஆறு முறை கொல்லப்பட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வாருங்கள் பார்க்கலாம்.
கர்ணன் மரணிக்கும் போது கர்ணன் தான் தனது அண்ணன் என்று தெரிந்தவுடன் இவ்வாறு என் கைகளால் ஒரு பாவத்தை செய்ய வைத்து விட்டீர்களே மாதவா என்று கிருஷ்ணரை பார்த்து அர்ஜூனன் கேட்டார். அதற்கு கிருஷ்ணர் கர்ணனை நீ கொலை செய்ததாக எண்ணி விடாதே ஏற்கனவே ஆறு முறை மரணித்த ஒருவனையே நீ கொன்றாய் என்று கூறினார்.
காட்டில் ஒருமுறை கர்ணன் எய்த அம்பு ஒரு பிராமணனின் கன்றை கொன்றதால் இதேபோல் உதவியே இல்லாத நிலைமையில் நீ ஒரு நாள் கொல்லப்படுவாய் என்ற சாபத்தை வாங்கினார் கர்ணன். பிராமணன் என்று பொய் சொல்லி பரசுராமனிடம் வித்தைகள் கற்றுக் கொண்டதால் முக்கியமான நேரங்களில் கற்ற வித்தைகள் அனைத்தும் மறந்து போகும் என்று சாபத்தை வாங்கினார்.
ஒரு சிறுமி மண்ணில் நெய்யை கொட்டியதால் மண்ணில் இருந்த நெய்யை அவரது பலத்தை பயன்படுத்தி பிரித்து கொடுத்ததால் பூமாதேவி ஒரு சிறுமிக்காக என்னை துன்புறுத்துகிறாயே தக்க சமயத்தில் உன் தேர் சக்கரம் மண்ணில் புதையும் என்று சாபமிட்டார். கவச குண்டலம் இருந்தால் கர்ணனை அழிக்க முடியாது என்று எண்ணி இந்திரன் கர்ணனிடம் அனைத்தையும் தானமாக கேட்டு வாங்கி சென்றார்.
குந்திதேவி உத்திரம் மீது ஒரே ஒரு முறை நாகாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டும் மீதமுள்ள நான்கு மகன்களை கொள்ளவே கூடாது என்ற வரம் வாங்கி உள்ளார். மேலும் தேர் சக்கரம் மண்ணில் புதைந்த போது தேரோட்டியான சல்லியன் இது என் வேலை இல்லை என்று கிளம்பிச் சென்றார். இப்படி 6 முறை கொல்லப்பட்ட ஒருவனைத் தான் நீ இப்பொழுது கொன்றுள்ளாய் என்று கிருஷ்ணர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ‘தங்கமாய் மாறிய உளுந்து’: திருச்செந்தூர் சிவன் கோவில் வரலாறு தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com