Mythology | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பழக்கம் எப்படி தொடங்கியது தெரியுமா?
Mythology | திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செய்யும் பழக்கம் எப்படி தொடங்கியது தெரியுமா?
Published on: November 19, 2024 at 9:10 am
Mythology | ஆந்திர மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் தங்கம், வெள்ளி, வைரம் என்று பல காணிக்கைகளை கொடுப்பதுண்டு. அவற்றுள் மிகவும் சிறப்புடையது முடி காணிக்கையாகும். முடி காணிக்கை செய்தால் ஏழுமலையானிடம் வேண்டியது நடக்கும் என்று இன்றளவும் நம்பப்படுகிறது.
இவ்வாறு முடி காணிக்கை செய்யும் பழக்கம் முதலில் எப்படி தொடங்கியது என்பதை பற்றிய புராண கதை ஒன்று உள்ளது. அது என்னவென்றால் முன்பு ஒரு சமயம் பெருமாளுக்காக பால் சுரந்த பசுவின் உரிமையாளர் பசு பெருமாளுக்கு தான் பால் சுரந்து இருக்கிறது என்பது தெரியாமல் தன் கையில் இருந்த ஆயுதத்தால் பசுவை தாக்க முயன்றான் அது தவறுதலாக பெருமாளின் தலையில் பட்டு அவருக்கு காயம் ஏற்படுகிறது.
இதனால் பெருமாளின் கேசம் சிறிது சிதைந்து விடுகிறது. நீலாதேவி என்கிற மலை இளவரசி பெருமாளின் மகிமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக திருப்பதி திருமலைக்கு வந்தார். அப்போது பெருமாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய தலைமுடி காற்றில் லேசாகக் களைந்து இருந்தது. இதைப் பார்த்த நீலா அவளுடைய தலை முடியை வேரோடு பிடிங்கி பெருமாளின் தலையில் வைத்து விடுவாள்.
இதனால் மகிழ்ச்சியடைந்த பெருமாள் நீலாவிடம், ‘ உனக்கு என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார். அதற்கு நீலா, ‘தங்களுக்கு முடி காணிக்கை தரும் பக்தர்களின் குறைகளைப் போக்கி நல்லருள் தர வேண்டும்’ என்று கேட்டாள். தனக்காக எதுவும் கேட்காத நீலாவின் தூய பக்தியால் மகிழ்ந்த பெருமாள் அந்த வரத்தை நீலாவிற்கு அப்படியே கொடுக்கிறார். இதனால் தான் திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பது வழக்கமாக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் வந்து முடி காணிக்கை. செய்கின்றனர். இதன் மூலம் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை திருப்பதி கோவிலுக்கு வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திரஜித் பெற்ற வரம்; 14 ஆண்டுகள் விழித்திருந்த லட்சுமணன்: ராமயாணத்தில் இந்த விஷயம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com