Rahul Gandhi at Valmiki Temple | மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
Rahul Gandhi at Valmiki Temple | மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார்.
Published on: October 17, 2024 at 1:49 pm
Rahul Gandhi at Valmiki Temple | மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, டெல்லி வால்மீகி கோவிலில் இன்று வழிபாடு நடத்தினார்.
நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வால்மீகி ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ராகுல், “டெல்லி வால்மீகி கோவிலுக்கு சென்றேன். மகாத்மா காந்தி இந்த வளாகத்தில் வால்மீகி சமூகத்துடன் நிறைய நேரம் செலவிட்டார் – நான் பாபு நிவாஸில் சில காலம் தங்கி உத்வேகம் பெற்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ராகுல், “உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தின் பாதையை அன்புடனும் கருணையுடனும் மனிதகுலத்திற்குக் காட்டிய மகரிஷி வால்மீகி ஜி அவர்களுக்கு வணக்கம்” எனக் கூறியுள்ளார்.
ராகுல் தனது வாழ்த்துச் செய்தியில், ராமாயணத்தை குறிப்பிட்டு இருந்தார். அதில், “இராமாயணக் காவியத்தைப் படைத்த ஆதி கவி மகரிஷி வால்மீகி அவர்களின் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்” எனக் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com