Heavy Rain in Bengaluru | பெங்களூருவில் கனமழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Heavy Rain in Bengaluru | பெங்களூருவில் கனமழை பெய்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published on: October 17, 2024 at 1:39 pm
Heavy Rain in Bengaluru | இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள ஐடி-பிடி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், கனமழை தொடரும் என்றும், வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களான சாமராஜநகர், மாண்டியா மற்றும் ராமநகரா ஆகியவை அக்டோபர் 17 வரை மழை பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Every year Lakhs of Indians from all parts of the country come and join this Crazy traffic of #Bengaluru.
— Professor (@Masterji_UPWale) October 15, 2024
We need to decongest the job opportunities, Traffic will automatically reduce#BengaluruRains pic.twitter.com/2eIro5zJFf
இந்த நிலையில், 24 மணிநேரம் தொடர்ந்து மழை பெய்ததைத் தொடர்ந்து, ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் விருப்பங்களைக் கோரியதைத் தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 37 மிமீ மழையும், மற்ற பகுதிகளில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை 65 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மன்யாதா டெக் பார்க் உட்பட பல முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அடுத்த மூன்று நாட்களுக்கு நகரத்தில் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com