Vinesh Phogat | இவர்கள் (மக்கள்) எங்களை மல்யுத்தத்தில் வெற்றி பெற வைத்தார்கள்; அதேபோல் அரசியலிலும் வெற்றி பெற செய்வார்கள் என காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
Vinesh Phogat | இவர்கள் (மக்கள்) எங்களை மல்யுத்தத்தில் வெற்றி பெற வைத்தார்கள்; அதேபோல் அரசியலிலும் வெற்றி பெற செய்வார்கள் என காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
Published on: September 10, 2024 at 12:16 pm
Updated on: September 10, 2024 at 1:30 pm
Vinesh Phogat | இந்திய மல்யுத்த சம்மேளத்தின் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர்களில் முக்கியமானவர் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத். இவரும், பஜ்ரங் புனியாவும் தற்போது காங்கிரஸ் கடசியில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வினேஷ் போகத்துக்கு ஹரியானாவின் ஜூலானா (Julana) தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் வினேஷ் போகத், “இவர்கள் (மக்கள்) எங்களை மல்யுத்தத்தில் உற்சாகப்படுத்தி வெற்றி பெற செய்தார்.
அதேபோல் அரசியலிலும் வெற்றியை தருவார்கள். நாங்கள் கடவுள் மற்றும் மக்கள் ஆசிர்வாதத்தால் வெற்றி பெறுவோம்” என்றார்.
आपके प्यार से हर जंग फतेह करेंगे। 🙏
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 8, 2024
जिस तरह मैंने दंगल में हर चुनौती का सामना किया, वैसे ही इस मेरे अपनों के आशीर्वाद से नई जंग को भी पार कर लूंगी। मेरे लिए अब सबसे बड़ा मेडल मेरे हल्के और मेरे अपने लोगों की जिम्मेदारी निभाना है। वो दर्द तो उसी दिन पीछे छूट गया, जिस दिन मैंने… pic.twitter.com/rv3NqvI8vD
மேலும், “அவர்கள் ஆசிர்வாதம் இன்றி எதுவும் இல்லை. கடந்த காலத்தில் நாங்கள் முன்னேறி சென்றோம். தற்போதும் நாங்கள் முன்னேறி செல்வோம் என நம்புகிறேன்.
எப்போதும் போல் சரியானதை அவர்கள் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார். ஹரியானாவில் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கு அக்டோபர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி செப்டம்பர் 12 ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாக்குகளும் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காத்திருந்த கெஜ்ரிவால்; கைவிட்ட காங்கிரஸ்: ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com