Jalaluddin alias Chhangur Baba: உத்தரப் பிரதேசத்தில் 1,500 இந்துப் பெண்களை ஜலாலுதீன் பாபா என்பவர் மதம் மாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன. யார் இந்த ஜலாலுதீன் பாபா?
Jalaluddin alias Chhangur Baba: உத்தரப் பிரதேசத்தில் 1,500 இந்துப் பெண்களை ஜலாலுதீன் பாபா என்பவர் மதம் மாற்றியதாக புகார்கள் எழுந்துள்ளன. யார் இந்த ஜலாலுதீன் பாபா?
Published on: July 16, 2025 at 10:24 pm
அலகாபாத், ஜூலை 16 2025: உத்தரப் பிரதேசத்தில் 1,500க்கும் மேற்பட்ட இந்துப் பெண்கள் மதம் மாற்றம் செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில் இந்து மற்றும் இஸ்லாம் அல்லாத பிற மத பெண்கள் மற்றும் ஆண்களும் கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து உத்தரப் பிரதேச பயங்கரவாத எதிர்ப்புப் படை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் இந்தியா டுடே ஆங்கில சேனல் தெரிவித்துள்ளது.
இந்த மதமாற்றத்தில் பாபா ஜலாலுதீன் என்பவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. யார் இவர்?
யார் இந்த பாபா ஜலாலதீன்?
அதிகாரிகளின் கூற்றுப்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள மத்பூரைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவர், சங்கூர் பாபா எனவும் அழைக்கப்படுகிறார். இவர்தான், ஏழை, விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களை குறி வைத்து மத மாற்றத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் இவர் இந்திய மாநிலங்கள் முழுவதும் மதமாற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவருக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நிதி ஆதாயம் கிடைத்துள்ளது. இவருக்கு மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் நெட்வொர்க் இருந்துள்ளது. இவர் மத மாற்றம் மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு தர்காக்களை பயன்படுத்தி வந்துள்ளார். இவர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சட்டவிரோதம்
இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சங்கூர் பாபாவின் செயல்பாடுகள் “சமூக விரோதம்” எனக் கூறினார். தொடர்ந்து, ஜலாலுதீனுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் இதர கட்டடங்கள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டன. மேலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க : மராத்தியில் பேசு.. ரெஸ்டாரெண்ட் உரிமையாளருக்கு அறை!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com