Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Taslima Nasreen: வங்கதேசத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், “அனைத்து வங்காளிகளும் இந்தியர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
Published on: October 1, 2025 at 3:33 pm
கொல்கத்தா, அக்.1, 2025: நாடு கடத்தப்பட்ட வங்காளதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், “இந்து கலாச்சாரம் வங்காள கலாச்சாரத்தின் அடித்தளம்” எனக் கூறியுள்ளார். ஒரு பூஜை பந்தலில் இருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட கொண்ட நஸ்ரின், “நாங்கள் வங்காளிகள் – வரலாற்றின் போக்கில் நாம் எந்த மதத்தையோ அல்லது தத்துவத்தையோ ஏற்றுக்கொண்டிருந்தாலும் – நமது தேசிய அடையாளத்தில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இந்தியாவின் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் நாத்திகர்களின் மூதாதையர்கள் என அனைவரும் கிட்டத்தட்ட அனைவரும் இந்திய இந்துக்களாக இருந்தவர்கள்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அஸ்ஸாம் பாடகர் மரணம்.. மேலாளர், ஈவென்ட் அமைப்பாளர் கைது!
There is nothing to conceal: Hindu culture is the foundation of Bengali culture. We Bengalis—whatever religion or philosophy we may have embraced over the course of history—belong, in our national identity, to India. The forefathers and foremothers of Hindus, Buddhists,… pic.twitter.com/yyvYN3dZqH
— taslima nasreen (@taslimanasreen) September 29, 2025
ஜாவேத் அக்தர் பதில்
இதற்குப் பதிலளித்த ஜாவேத் அக்தர், “பாரம்பரிய மக்களான நாங்கள் வங்காள கலாச்சாரம், மொழி மற்றும் இலக்கியத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். ஆனால், கங்கா ஜாம்னி அவத் கலாச்சாரத்தையும் அதன் நுட்பத்தையும் பாராட்டவும் மதிக்கவும் யாராவது தவறினால், அது முற்றிலும் அவரது தோல்வி.
இந்தக் கலாச்சாரத்திற்கும் அரபு கலாச்சாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆம், பார்சியன் மற்றும் மத்திய ஆசிய கலாச்சாரங்களும் மொழிகளும் மேற்கத்திய கலாச்சாரத்தைப் போலவே நமது கலாச்சாரத்திலும் மொழியிலும் ஊடுருவியுள்ளன. ஆனால் நமது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில். பல வங்காள குடும்பப்பெயர்கள் பாரசீக மொழியில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் அனுமதி.. மகன் பரபரப்பு தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com