மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வாகியுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வாகியுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன.
Published on: November 26, 2024 at 6:48 pm
Maharashtra New CM | மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கான சலசலப்புகள் தற்போது ஏற்படத் தொடங்கிவிட்டன.
இதற்கிடையில், செவ்வாய்கிழமை (நவ.26, 2024) காலை ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், தேவேந்திர ஃபட்னாவிஸ் உயர் பதவியை ஏற்க வழி வகுத்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏக்நாத் ஷிண்டே தனது ராஜினாமா கடிதத்தை மும்பை ராஜ்பவனில் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனிடம் சமர்ப்பித்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை ஷிண்டே தற்காலிக முதல்வராக பணியாற்றுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வாகியுள்ளார் எனத் தகவல்கள் கூறுகின்றன. ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக டிச.2ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இந்திய அரசியலமைப்பு, ‘சமஸ்கிருத பதிப்பு’ வெளியீடு: இதன் சிறப்பு என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com