அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் விஜய்யை சந்தித்தார்
அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் விஜய்யை சந்தித்தார்
Published on: November 26, 2024 at 7:43 pm
‘Amaran’ director Meets Vijay | ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளியான படம் அமரன். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும் சாய் பல்லவி முகுந்தின் மனைவியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் சண்டை காட்சிகள் காதல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளன. உலக அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் விஜயை சந்தித்துள்ளார். அமரன் படத்திற்காக நடிகர் விஜய் ராஜ்குமார் பெரியசாமியை பாராட்டியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து, நன்றி விஜய். சார் உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க கீர்த்தி சுரேஷின் டாப் 9 திரைப்படங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com