இலங்கை அதிபர் திசநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை அதிபர் திசநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக சீனா செல்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Published on: November 26, 2024 at 6:15 pm
Sri Lankas President India visit | இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ இந்திய பயணத்தை தொடர்ந்து சீனாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ செவ்வாய்க்கிழமை (நவ.26, 2024) தெரிவித்தார். கொழும்பில் உள்ள சீனத் தூதுவரால் திஸாநாயக்கவுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதற்கிடையில், திஸாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டு பயணம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இந்தியாவுக்கு மேற்கொள்ளப்படும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும், நவம்பர் 18 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், டிசம்பர் நடுப்பகுதியில் இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் திஸாநாயக்க இந்தியாவிற்கு வருவார் என்றார். எனினும், தேதி இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
இதையும் படிங்க இந்தியா வரும் இங்கிலாந்து மன்னர், ராணி: எந்தெந்த நாடுகளுக்கு செல்கிறார்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com