Marxist Communist Party Sitaram Yechury | சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19 அன்று நிமோனியா போன்ற மார்பு தொற்று சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

October 19, 2025
Marxist Communist Party Sitaram Yechury | சீதாராம் யெச்சூரி ஆகஸ்ட் 19 அன்று நிமோனியா போன்ற மார்பு தொற்று சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Published on: September 10, 2024 at 3:43 pm
Marxist Communist Party Sitaram Yechury | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும் கட்சியின் பொதுச்செயலாளருமான சீதாராம் யெச்சூரிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. 72 வயதான மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் சீதாராம் யெச்சூரி, ஆகஸ்ட் 19 அன்று நிமோனியா போன்ற மார்பு தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி, புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சுவாசக் குழாய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சுவாச ஆதரவில் உள்ளார்.
It’s my loss that I was not able to physically attend this memorial meeting and pay my homage to Com. Buddhadev Bhattacharya.
— Sitaram Yechury (@SitaramYechury) August 22, 2024
It’s most unfortunate that I had to connect from AIIMS to convey my feelings, emotions & revolutionary Lal Salaam to Buddho da ✊🏾 pic.twitter.com/Etz9pVBXgn
இந்த நேரத்தில் ஆபத்தான நிலையில் உள்ள அவரது உடல்நிலையை பல்துறை மருத்துவர்கள் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக.22ஆம் தேதி சீதாராம் யெச்சூரி மருத்துவமனையில் இருந்தபடி, முன்னாள் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் உடல் ரீதியாக கலந்துகொள்ளவும், தோழருக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனது எனது இழப்பு” எனத் தெரிவித்து இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : இடஒதுக்கீட்டை ரத்து செய்ய யோசிப்போம்.. ஆனால்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com