Maharastra | Shinde Shiv Sena | ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு எனது சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்படும் என ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்துள்ளார்.
Maharastra | Shinde Shiv Sena | ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு எனது சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்படும் என ஷிண்டே சிவசேனா எம்.எல்.ஏ மிரட்டல் விடுத்துள்ளார்.
Published on: September 16, 2024 at 6:18 pm
Maharastra | Shinde Shiv Sena | மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிறருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய ராகுல் காந்தி விரும்புவதாகவும், அதனால் அதை முடிவுக்கு கொண்டுவரும் மொழியைப் பயன்படுத்துவதாகவும் கெய்க்வாட் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து பேசிய அவர், “மக்களவை தேர்தலில் போது இடஒதுக்கீடு தொடர்பான பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளார். இன்று இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரும் மொழியைப் பேசி காங்கிரஸின் உண்மையான முகத்தைக் காட்டியுள்ளார். அவரின் நாக்கை அறுப்பவருக்கு எனது சார்பில் ரூ.11 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க : ‘ராகுல் இந்தியர் அல்ல; நம்பர் 1 பயங்கரவாதி’: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com