Bihar CM Nitish Kumars son: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஜேடியு அலுவலகத்திற்கு வெளியே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.
Bihar CM Nitish Kumars son: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரின் அரசியல் பிரவேசம் குறித்த ஊகங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஜேடியு அலுவலகத்திற்கு வெளியே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.
Published on: March 17, 2025 at 11:30 am
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்தில் நடைபெற்ற ஹோலி நிகழ்வில் நிஷாந்த் தனது தந்தை நிதிஷ் குமாருடன் காணப்பட்டார். மேலும், அவர் மூத்த ஜனதா தளம் (ஐக்கிய) தலைவர்கள் மற்றும் கட்சி ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
இது அவரது அரசியல் பிரவேச ஊகங்களை அதிகரித்துள்ளது. இந்த ஊகத்திற்கு கூடுதலாக, ஜே.டி.(யு) ஆதரவாளர்கள் நிஷாந்தை வரவேற்று பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வெளியே சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரைச் சுற்றியுள்ள ஊகங்களால் மாநிலத்தில் அரசியல் விவாதங்கள் பரபரப்பாகி வருகின்றன. பீகாரில் ஓட்டப்ட்டிருந்த சுவரொட்டிகளில், ‘பீகார் கி மாங், சன் லியே நிஷாந்த், பஹுத் பஹுத் தன்யாவாட் (நிஷாந்த், பீகாரின் கோரிக்கைகளைக் கேட்டதற்கு மிக்க நன்றி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க :கேதர்நாத்தில் இந்துக்கள் அல்லாதோருக்கு தடை: பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு!
#WATCH | Bihar | JDU supporters put up a poster outside the party office in Patna in support of CM Nitish Kumar's son Nishant Kumar.
— ANI (@ANI) March 16, 2025
The posters read 'Bihar ki maang, sun liye Nishant, bahut bahut dhanyawaad' (Nishant, thank you very much for listening to the demands of… pic.twitter.com/Gzugo7KnkQ
தேஜஸ்வி யாதவ் கருத்து
இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் பாதிக்கப்பட்ட ஜேடியுவில் உள்ள சில கூறுகள் நிஷாந்த் அரசியலில் நுழைவதைத் தடுக்க முயற்சிப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
நிஷாந்தின் அரசியல் அறிமுகம் ஜேடியு மீண்டும் பலம் பெற உதவும் என்றும், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதை விரும்பாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க : திருவனந்தபுரம்: வீட்டில் பிணமாக கிடந்த பெண் மருத்துவர்; கழுத்து மற்றும் மணிக்கட்டு அறுப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com