புதுடெல்லி, பிப்.3, 2026: சுப்ரீம் கோர்ட், வாட்ஸ்அப் மற்றும் அதன் உரிமையாளர் மேட்டா நிறுவனத்தின் டேக் இட் அல்லது லீவ் இட் (Take it or leave it) என்ற தனியுரிமைக் கொள்கையை கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், “நாட்டின் தனியுரிமை உரிமையுடன் விளையாட முடியாது. இது அரசியலமைப்பை கேலி செய்வது” எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2021 தனியுரிமைக் கொள்கை தொடர்பாக போட்டியாளர் ஆணையம் (CCI) ₹213.14 கோடி அபராதமாக வாட்ஸ்அப் மற்றும் மெட்டா நிறுவனத்துக்கு விதித்தது.
இந்த அபராத தொகையை, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதிப்படுத்தியது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கை மற்றும் தரவு பகிர்வு முறைகள் குறித்து சத்தியப்பிரமாணம் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், “நாட்டின் கிராமப்புறத்தில் இருக்கும் ஒருவருக்கு உங்கள் விதிமுறைகள் புரியுமா? எளிமையாக விளக்க வேண்டும்” என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் வாட்ஸ்அப், மெட்டா vs இந்திய போட்டி ஆணையம் தொடர்பான வழக்கில் வாட்ஸ்அப் மற்றும் மெட்டாவிற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் விதித்துள்ளது.
இதையும் படிங்க: கணவன் அல்ல ‘monster’.. 27 வயது பெண் போலீஸுக்கு நேர்ந்த பரிதாபம்!
Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்….
Rahul Gandhi: மோடி அரசு எந்த திசையும் திட்டமும் இன்றி பயணிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான, ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்….
Kerala election 2026: பாலக்காட்டில் சிபிஎம்–பாஜக ‘ரகசிய புரிதல்’ தெளிவாக உள்ளது என்று கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்….
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி ஈரான் அதிபருடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது….
Sofia Firdous: ஒரிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏவான சோஃபியா ஃபிர்தோஸ், ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது….
Maharashtra: மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்