India to deport 16000 foreigners இந்தியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினரை நாடுகடத்தப்பட உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
India to deport 16000 foreigners இந்தியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினரை நாடுகடத்தப்பட உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on: September 16, 2025 at 3:57 pm
புதுடெல்லி, செப்.16, 2025: இந்தியாவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை உள்துறை அமைச்சக வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கின்றன.
அதில், “போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இந்தியா முழுவதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 16,000 வெளிநாட்டினரை நாடு கடத்த திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் பெரும்பாலும் வங்கதேசம், பிலிப்பைன்ஸ், மியான்மர், மலேசியா, ஆப்பிரிக்க நாடான கானா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் உள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
சமீப காலங்களில் போதைப்பொருளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாக விவரிக்கப்படும் இந்த நடவடிக்கை, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இந்த வெளிநாட்டினர் போதைப்பொருள் கடத்தல் முதல் போக்குவரத்து வரை பல்வேறு குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டு, தற்போது பல மாநிலங்களில் தடுப்புக்காவல் நிலையங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உத்தரப் பிரதேசத்தில் காவல் நிலையம் முற்றுகை.. 200 பேர் மீது எஃப்.ஐ.ஆர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com