Rajnath Singh: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெறும் அறிவிப்பாக அல்ல, உறுதியான நடவடிக்கையாக பின்பற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Rajnath Singh: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை வெறும் அறிவிப்பாக அல்ல, உறுதியான நடவடிக்கையாக பின்பற்றி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Published on: July 18, 2026 at 3:49 pm
புதுடெல்லி, ஜூலை 18, 2026: தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற ‘Forces First Conclave’ நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை (Zero Tolerance) கொள்கை வெறும் கோஷம் அல்ல, அது உறுதியான செயல்பாட்டு அணுகுமுறை என்று வலியுறுத்தினார். பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் மட்டுமல்லாமல், தேவைப்பட்டால் அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்களுக்கே சென்று தாக்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை குறிப்பிட்ட அவர், அந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப ரீதியிலான போர் திறனை உலகம் முழுவதும் கண்டதாக கூறினார். அந்த நடவடிக்கையில் ஆகாஷ்தீர் (Akashteer), ஆகாஷ் ஏவுகணை அமைப்பு (Akash Missile System), பிரம்மோஸ் (BrahMos) உள்ளிட்ட நவீன ஏவுகணை அமைப்புகள் மற்றும் பல்வேறு அதிநவீன பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவதையும், பாதுகாப்பு உற்பத்தியில் இறக்குமதி சார்பைக் குறைப்பதையும் முக்கிய இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 75 சதவீதம் இந்திய நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் புதிய பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறை(DAP) அறிமுகப்படுத்தப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு மேலும் ஊக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், 2014-ஆம் ஆண்டு சுமார் ரூ.40,000 கோடியாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு தற்போது ரூ.1.78 லட்சம் கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளதாகவும், நடப்பு ஆண்டில் அதை ரூ.2 லட்சம் கோடியை தாண்டும் இலக்குடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனைக்குரிய குற்றம்.. மத்திய அரசு புதிய சட்டம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com