குடும்பம், காதல், த்ரில்லர்… ஜூலையில் ‘Bullet’ ஓடிடியில் தவறவிடக் கூடாத 4 தமிழ் தொடர்கள்!

Bullet OTT: குடும்பம், காதல், த்ரில்லர் உள்ளிட்ட பல்வேறு கதைக்களங்களில் உருவான நான்கு புதிய தமிழ் மைக்ரோடிராமா தொடர்களை Bullet ஓடிடி தளம் ஜூலை மாதத்திற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

Published on: July 18, 2026 at 4:18 pm

சென்னை, ஜூலை 18 2026 : குறுகிய நேரத்தில் விறுவிறுப்பான கதைகளை வழங்கும் மைக்ரோடிராமா (Microdrama) வடிவம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், புல்லட் ஓடிடி தளம் ஜூலை மாதத்திற்கான நான்கு புதிய தமிழ் தொடர்களை அறிவித்துள்ளது. குடும்பம், காதல், த்ரில்லர் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களங்களை மையமாகக் கொண்ட இந்த தொடர்கள் பல்வேறு தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

அக்னி சிறகுகள்

நவீன் ஷைக் தாவூத் இயக்கிய ‘அக்னி சிறகுகள்’ குடும்பக் கதையாக உருவாகியுள்ளது. வினுஷா தேவி, மது, இந்திரன்ஸ் நடித்துள்ள இந்தத் தொடர், சவால்களை மீறி கனவுகளை நோக்கி முன்னேறும் மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.

உறவுகள் தொடர்கதை

ஹை ட்ரீமர்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான ‘உறவுகள் தொடர்கதை’ தொடரில் ரோகித் முரளிதரன் மற்றும் ப்ரீத்தி நடித்துள்ளனர். கடந்த உறவுகளும் தற்போதைய உணர்வுகளும் மோதும் காதல் நாடகமாக இது உருவாகியுள்ளது.

டாங்கில்ட்

த்ரில்லர் ரசிகர்களுக்காக கீதா நாயுடு இயக்கிய ‘Tangled’ தொடரில் ஹர்ஷ் ரோஷன், பிரவீன் ராம், ரிஷிதா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நண்பர்களின் சுற்றுலாவில் நடைபெறும் எதிர்பாராத சம்பவம், அதை மறைக்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் அதனால் உருவாகும் அச்சம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் நகர்கிறது.

அடுத்த 30 நாட்கள்

ராஜ்தீப் கோஷ் இயக்கிய ‘Next Thirty Days’ தொடரில் தினேஷ் KR, நிவேதிதா ராஜப்பன், ஹர்ஷினி ஜீவ், அஸ்வின், உபர்ட் பிராங்க்ளின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கணவரின் உயிலின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் குடும்பச் சொத்துகளை முழுமையாகச் செலவிட வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக்கொள்ளும் குடும்பத் தலைவியின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், குடும்ப உணர்வுகளும் நாடகத் திருப்பங்களும் நிறைந்த கதையாக உருவாகியுள்ளது.

ஜூலை மாதத்தில் Bullet ஓடிடி தளத்தில் இந்த நான்கு தொடர்களும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

இதையும் படிங்க: இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன்

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யூடியூப் ஜோடியின் படம்!
Mr Bhaarath

‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள யூடியூப் ஜோடியின் படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com