Rahul Gandhi: தேர்தல்கள் திருடப்படும் வரை நாட்டில் வேலையின்மை, ஊழல் அதிகரிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi: தேர்தல்கள் திருடப்படும் வரை நாட்டில் வேலையின்மை, ஊழல் அதிகரிக்கும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Published on: September 23, 2025 at 2:27 pm
புதுடெல்லி, செப்.23, 2025: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று (செவ்வாய்கிழமை) தேர்தல்கள் “திருடப்படும்” வரை, நாட்டில் வேலையின்மை மற்றும் ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று கூறினார்.மேலும் இளைஞர்கள் இனி “வேலை திருட்டு” மற்றும் “வாக்கு திருட்டு” ஆகியவற்றை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து இந்தியில் ட்விட்டர் எக்ஸ் (X) பதிவில் ராகுல் காந்தி, “நாட்டில் வேலையின்மை இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை. இது, “வாக்கு திருட்டு” உடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரு அரசாங்கம் பொதுமக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வரும்போது, அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும், இதர வாய்ப்புகளையும் வழங்குவதாகும்.ஆனால் பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறவில்லை – அவர்கள் வாக்குகளைத் திருடி நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆட்சியில் நீடிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “நாட்டில் வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து ராகுல் காந்தி, “அதனால்தான் வேலைகள் குறைந்து வருகின்றன, ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்துள்ளன, இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது.
அதனால்தான் ஒவ்வொரு தேர்வு வினாத்தாள் கசிவும், ஒவ்வொரு ஆட்சேர்ப்பும் ஊழல் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.நாட்டின் இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள், கனவு காண்கிறார்கள், தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தனது மக்கள் தொடர்பு, பிரபலங்கள் அவரைப் புகழ்ந்து பாட வைப்பது மற்றும் கோடீஸ்வரர்களின் லாபம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து அவர்களை விரக்தியடையச் செய்வது அரசாங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது,” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “இப்போது, நிலைமை மாறி வருகிறது. உண்மையான போராட்டம் வேலைகளுக்கு மட்டுமல்ல, வாக்கு திருட்டுக்கு எதிரானது என்பதை இந்தியாவின் இளைஞர்கள் புரிந்துகொள்கிறார்கள்.ஏனென்றால் தேர்தல்கள் திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழல் தொடர்ந்து அதிகரிக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :ஜெய்ப்பூர்-மும்பை ரயில் துப்பாக்கிச் சூடு.. தாடி வைத்த நபரை சுட்ட போலீஸ்.. சாட்சி பரபரப்பு வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com