Narendra Modi : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார்.
Narendra Modi : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்தார்.

Published on: April 24, 2026 at 2:01 pm
கொல்கத்தா, ஏப். 24 2026: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்து படகோட்டிகளை சந்தித்தார். அப்போது படகோட்டியை கட்டியணைத்து ரூ.1000 வழங்கியதும் கவனம் பெற்றது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்தார். அதில், “இன்று காலை கொல்கத்தாவில் ஹூக்ளி நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன். இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்பாக அமைந்தது. படகோட்டிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின் கடின உழைப்பு போற்றத்தக்கது” என்று குறிப்பிட்டார்.
மேலும், காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்ததாகவும், ஹூக்ளி நதிக்கரையில் மிகவும் சிறப்பான காலைப்பொழுது அமைந்ததாகவும் தெரிவித்தார்.
হুগলি নদীর ওপর কাটানো কিছু বিশেষ মুহূর্ত… কলকাতায় এক অবিস্মরণীয় সকাল। pic.twitter.com/VRpkwdcjwl
— Narendra Modi (@narendramodi) April 24, 2026
வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டதாக கூறிய அவர், கங்கை நதி மேற்குவங்க மக்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளதாகவும், அது ஒரு நாகரிகத்தின் காலத்தால் அழியாத ஆன்மாவை தாங்கிச் செல்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ராகுலுக்கு செக் வைத்தது யார்? மம்தா? தேர்தல் ஆணையம்.. பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com