PM Narendra Modi: “உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
PM Narendra Modi: “உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான்” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
Published on: September 20, 2025 at 3:27 pm
பாவ்நகர், செப்.20, 2025: குஜராத்தில் பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், பாவ்நகரில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரதமர், தன்னம்பிக்கையின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
“இன்று, இந்தியா ‘விஸ்வபந்து’ என்ற உணர்வோடு முன்னேறி வருகிறது. உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது மிகப்பெரிய எதிரி மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப்பெரிய எதிரி, நாம் ஒன்றாக சேர்ந்து இந்தியாவின் இந்த எதிரியை, சார்பு எதிரியை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “”வெளிநாட்டு சார்பு அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வியும் அதிகமாகும். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு, உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு ஆத்மநிர்பர் ஆக வேண்டும்.
நாம் மற்றவர்களைச் சார்ந்து இருந்தால், நமது சுயமரியாதை பாதிக்கப்படும். 1.4 பில்லியன் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது” என்றார்.
ஹெச்1 பி விசா கட்டுப்பாடு
முன்னதாக, H-1B விசாவிற்கு விண்ணப்பிக்கும் எவரும் விண்ணப்பக் கட்டணமாக $100,000 செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இது புதிய H-1B விசா வைத்திருப்பவரின் சராசரி ஆண்டு சம்பளத்தை விட அதிகமாகும். இந்நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில்.. கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை.. அஸ்வினி வைஸ்ணவ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com