Pahalgam Terror Attack: “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆண்களை குறி வைத்து தாக்கினார்கள்; இதுபோன்ற ஓர் துன்பம் எந்த குடும்பத்துக்கும் நிகழக் கூடாது” என பாதிக்கப்பட்ட கர்நாடகப் பெண் பல்லவி மஞ்சுநாத் கண்ணீர் மல்க கூறினார்.
Pahalgam Terror Attack: “ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆண்களை குறி வைத்து தாக்கினார்கள்; இதுபோன்ற ஓர் துன்பம் எந்த குடும்பத்துக்கும் நிகழக் கூடாது” என பாதிக்கப்பட்ட கர்நாடகப் பெண் பல்லவி மஞ்சுநாத் கண்ணீர் மல்க கூறினார்.
Published on: April 24, 2025 at 6:35 pm
Updated on: April 24, 2025 at 9:58 pm
சிவமொக்கா, ஏப்ரல் 24 2025: ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் 2025 ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து, அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். பயங்கரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில், உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கூக்குரலும் கேட்கிறது. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் பாணியிலேயே தக்க பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவரின் மனைவி, ” இது போன்ற துன்பம் எந்த ஒரு குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது” என்றார்.
#WATCH | #PahalgamTerroristAttack | Shivamogga, Karnataka | Pallavi Manjunath, wife of victim Manjunath Rao, says, " It should be a bad dream, I should wake up from it. This should not happen to any of the family. They (terrorists) were targeting only men…" pic.twitter.com/k0n052fPFq
— ANI (@ANI) April 24, 2025
மேலும் பயங்கரவாதிகள் ஆண்களை மட்டும் குறி வைத்து தாக்கினார்கள் என்றும் அவர் கூறினார். ANI உள்ளிட்ட செய்தி நிறுவனத்திடம் பேசிய மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி, ” அது ஒரு கெட்ட கனவு போல் இருந்தது; ஆண்களைக் குறிவைத்து அவர்கள் கொன்றார்கள். இது போன்ற துன்பம் எந்த ஒரு குடும்பத்திற்கும் ஏற்படக்கூடாது. இந்த துன்பத்திலிருந்து நான் மீள வேண்டும்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி உறுதி
இந்த நிலையில், “ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூளை முடுக்கில் ஒளிந்து இருந்தாலும் அவர்களை பிடித்து தண்டிப்போம்” என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையில் சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி மாறி ஏவுகணை சோதனையை நிகழ்த்தி வருகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம்: போருக்கான அழைப்பு என்கிறது பாகிஸ்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com