பல்ஹாம் தாக்குதல் பயங்கரவாதிகள் மீது’துல்லிய தாக்குதல் நடத்தப்படும்’: ராஜ்நாத் சிங்

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாககுதல் நடத்தப்படும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

Published on: April 23, 2025 at 5:02 pm

ஜம்மு, ஏப்.23 2025: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமின் பைசரனில் அப்பாவி பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், குறைந்தது 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதை தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர்.

சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். தற்போது வரை அப்பகுதியில் நடவடிக்கை தொடந்து வருவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது. பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள மலையிலிருந்து பயங்கரவாதிகள் இறங்கி வந்துள்ளனர். இந்தப் பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுவது ஆகும்.

ராஜ்நாத் சிங் உறுதி

இந்தத் தாக்குதலை பாதுகாப்புத துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பஹல்காமில் நடந்த கோழைத்தனமான செயலில் பல அப்பாவி உயிர்களை இழந்தோம். நாங்கள் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளோம்.
அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்தச் செயலைச் செய்தவர்களை மட்டுமல்ல, திரைக்குப் பின்னால் உள்ளவர்களையும் நாங்கள் அடைவோம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் உரத்த மற்றும் தெளிவான பதிலைக் காண்பார்கள், நாட்டிற்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்றார்.

இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீருக்கு ஹனிமூன் சென்ற அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதிகள் வெறிச்செயல்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com