“காங்கிரஸூக்கு எதிராக லடாக்கை போலவே அனைத்து இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என மெகபூபா முஃப்தி கூறினார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
“காங்கிரஸூக்கு எதிராக லடாக்கை போலவே அனைத்து இடங்களிலும் தேசிய மாநாட்டு கட்சி சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என மெகபூபா முஃப்தி கூறினார்.
Published on: September 9, 2024 at 11:51 am
Mehbooba Mufti | “ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க தேசிய மாநாட்டு (NC) கட்சியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள்” என மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன, இதில் 7 இடங்கள் பட்டியல் சாதியினருக்கு (SCs) மற்றும் 9 இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முந்தைய சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) 28 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) 25 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு (என்சி) 15 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மெகபூபா முஃப்தி பேட்டி
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முஃப்தி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி எந்த எல்லைக்கும் செல்லும்” என விமர்சித்தார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீர்- சட்டப்பிரிவு 370 நீக்கம்; பயங்கரவாதம் முடிவுக்கு வந்ததா? ஃபரூக் அப்துல்லா
தொடர்ந்து பேசிய அவர், “நான் பாரதிய ஜனதா கட்சி ஆதரவுடன் கூட்டணியில் இருந்தபோது, பிடிபி மற்றும் ஜே&கே மக்களின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தேன்.
ஆனால் என்.சி (தேசிய மாநாடு) பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, அவர்கள் தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தனர். இதை நான் முன்பே கூறியுள்ளேன்.
கொள்கை கூட்டணி அல்ல
1987 தேர்தலின் போது தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது 1987 தேர்தலின் போது ஜே & காஷ்மீரை இரத்த ஆறுக்குள் தள்ளியிருக்காது. இதற்குப் பின்னால் உள்ள காரணம் தேசிய மாநாட்டு கட்சியின் நடவடிக்கைகள்தான். அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று ஆட்சி அமைக்கலாம்” என்றார்.
சுயேச்சை வேட்பாளர்
மேலும், “லடாக் போலவே அனைத்து இடங்களிலும் காங்கிரஸுக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரை சூறையாடிய 3 குடும்பங்கள்: அமித் ஷா கடும் தாக்கு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com