Marxist MLA actor Mukesh arrested | கொச்சியில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர் ஊடகங்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
Marxist MLA actor Mukesh arrested | கொச்சியில் நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்டார். போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர் ஊடகங்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
Published on: September 24, 2024 at 4:33 pm
Updated on: September 24, 2024 at 4:35 pm
Marxist MLA actor Mukesh arrested | நடிகரும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வுமான எம். முகேஷ் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (செப்.24, 2024) கைது செய்யப்பட்டார். அவருக்கு, எர்ணாகுளம் நீதிமன்றம் ஏற்கனவே முன்ஜாமீன் அளித்திருந்த நிலையில் விடுவிக்கப்பட்டார்.
இதேபோன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் சக நடிகரும், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) முன்னாள் பொதுச் செயலாளருமான சித்திக்கின் முன்ஜாமீனை கேரள உயர்நீதிமன்றம் மறுத்த சில மணிநேரங்களில் இந்த கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது. நடிகை ஒருவர் அளித்த பாலியல் வன்புணர்வு புகாரின் அடிப்படையில் முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகேஷ், கொல்லம் சட்டமன்ற தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்வாகியுள்ளார். இவர், 2010 ஆம் ஆண்டு கொச்சியில் உள்ள தனது குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் எனத் தெரிவித்துள்ளார். இதே பெண் மற்றொரு நடிகரான சித்திக் மீதும் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டபோது அவர் ஊடகங்களை சந்திக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேரளத்தில் அடுத்த சலசலப்பு; செக்ஸ் புகார்: சிக்கலில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com