Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
Published on: September 26, 2025 at 12:47 pm
லக்னோ, செப்.26, 2025: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இது தொடர்பான மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ தாகூர்கஞ்ச் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என்ற புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அந்தப் புகாரில், மாயமான மனைவி சட்டவிரோதமாக சதர்கஞ்ச் பகுதியில் துணிக் கடை வைத்துள்ள மன்சூர் ஹாசன் என்ற சைஃபி என்பவருடன் வசித்து வருகிறார்.
அவருடன் 12 வயதான எனது மகனும் இருக்கிறார். எனது மகன்அங்கு கொடுமைப்படுத்தப்படுகிறார். அவரது இரகசிய உடல் பகுதிகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்தப்படுகிறார்” எனத் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மன்சூர் ஹாசனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து மனைவி மற்றும் மகனை மீட்டனர்.
திருமணத்தை மீறிய உறவு
புகார் அளித்தவரின் மனைவியுடன் ஹாசன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளார். இந்த உறவின் அடிப்படையில், ஹாசனுடன் தனது மகனையும் கூட்டிக் கொண்டு அப்பெண் வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் கள்ளக் காதலியின் மகனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, அவரை பாலினம் மாற்ற அறுவை சிகிச்சைகள் செய்ய வற்புறுத்திய விஷயமும் வெளிவந்துள்ளது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. போலீசார் கைது செய்யப்பட்ட ஹாசனிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க : பேபி ஐ லவ் யூ.. மாணவிகளுக்கு ஆபாச மேசேஜ் அனுப்பிய சாமியார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com