மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணபடுகின்றன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணபடுகின்றன.
Published on: November 23, 2024 at 9:06 am
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மகாராஷ்டிராவை பொருத்தமட்டில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
ஜார்கண்டில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர வயநாடு உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இடை தேர்தலும் நடைபெற்றன. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
மகாராஷ்டிராவை பொருத்தமட்டில் ஆளும் ஷிண்டே சிவசேனா, பாஜக மற்றும் அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகா யுதி என்ற கூட்டணியை அமைத்துள்ளது. மறுபுறம் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மகா கூட்டணியை அமைத்துள்ளன. இது தவிர சில சுயேச்சை வேட்பாளர்களும் கவனம் பெறுகின்றனர்.
இதனால் மகாராஷ்டிராவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனினும் கருத்துக் கணிப்பு முடிவுகள், மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக வெளிவந்துள்ளன. மகாராஷ்டிராவில் பாஜக அதிகபட்சமாக 149 தொகுதிகளிலும், காங்கிரஸ் 101 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தாக்கரே சிவசேனா மற்றும் சரத் பவர் தேசியவாத காங்கிரஸ் தலா 86 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
ஜார்கண்டில் வாக்கு எண்ணிக்கை
ஜார்கண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை, ஆளுங்கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இம்மாநிலத்தில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com