Samir Modi arrested : பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் லலித் மோடியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Samir Modi arrested : பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் லலித் மோடியின் சகோதரர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
Published on: September 19, 2025 at 10:38 am
Updated on: September 19, 2025 at 10:41 am
புதுடெல்லி, செப்.19, 2025: நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபரும் முன்னாள் ஐ.பி.எல் தலைவருமான லலித் மோடியின் சகோதரர் சமீர் மோடி, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் டெல்லி காவல்துறையினரால் வியாழக்கிழமை (செப்.18, 2025) மாலை இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், “கடந்த வாரம் பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சமீர் மோடி கைது செய்யப்பட்டார்” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீர் மோடி நேரடி விற்பனை நிறுவனமான மோடிகேரின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். இதற்கிடையில், கடந்த ஆண்டு தனது தாயார் பினா மோடியுடனான வாரிசுரிமை தகராறு தொடர்பாகவும் சமீர் மோடியின் பெயர் செய்திகளில் அடிபட்டது.
முன்னதாக, தனது தந்தை நிறைவேற்றிய அறக்கட்டளைப் பத்திரத்தின்படி நிதியை விநியோகிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, சமீர் மோடி தனது தாயார் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : போதைப் பொருள் கடத்திய ஆசிரியை.. தட்டித் தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com