Netaji Subhas Chandra Bose: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சைக்குரிய பாடத் திட்டம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட நான்காம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கையேட்டில் காணப்பட்டது.
Netaji Subhas Chandra Bose: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த சர்ச்சைக்குரிய பாடத் திட்டம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட நான்காம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கையேட்டில் காணப்பட்டது.
Published on: August 18, 2025 at 10:24 pm
திருவனந்தபுரம், ஆக.18 2025: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆங்கிலேயர்களுக்கு பயந்து ஜெர்மனிக்கு ஓடிவிட்டார் என்று கூறும் கேரளாவின் பள்ளி பாடப்புத்தக வரைவு திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், “வரலாற்று தவறுகள்” உள்ள பகுதி சரி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது, சர்ச்சைக்குரிய பகுதி, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் தயாரிக்கப்பட்ட நான்காம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கையேட்டில் காணப்பட்டது.
கேரள கல்வி அமைச்சர் பேட்டி
கல்வி அமைச்சரும் சிபிஐ(எம்) தலைவருமான வி. சிவன்குட்டி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “பாடப்புத்தகத்தின் வரைவில் சில வரலாற்றுத் தவறுகள் வெளிப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினை கவனத்திற்கு வந்தபோது, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.
மேலும், “பாடப்புத்தகம் வரலாற்று உண்மைகளுடன் மட்டுமே அச்சிடப்படுவதை உறுதி செய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றைத் திரிபுபடுத்த முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கேரள அரசு பகிர்ந்து கொள்ளவில்லை” என்றார்.
ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு
இந்த நிலையில், ஆர்எஸ்எஸ்-சார்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், புத்தகத்தில் அதிக தவறுகள் இருந்ததாக கூறியுள்ளது. மேலும் இது, “கேரள மாணவர்களுக்கு வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில் பரப்புவதற்கான சிபிஐ(எம்) அரசாங்கத்தின் தீங்கிழைக்கும் முயற்சியாகும்” எனவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
தொடர்ந்து, “அதே பாடப்புத்தகத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் உள்ள வரைபடத்திலிருந்து அசாம் மற்றும் ஜார்க்கண்டின் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தவறு, நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்கவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அசாம் மீது படையெடுக்கும் முயற்சியை ரகசியமாக ஆதரிக்கவும் ஒரு மறைக்கப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்” எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பிரமாண பத்திரம் or மன்னிப்பு.. ராகுல் காந்திக்கு சிக்கலான ‘வாக்கு திருட்டு’!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com