Sabarimala gold issue: சபரிமலை தங்க ஆபரணம் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Sabarimala gold issue: சபரிமலை தங்க ஆபரணம் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Published on: October 10, 2025 at 2:52 pm
கொச்சி, அக்.10, 2025: சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் தங்கத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்குமாறு கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (அக்.10, 2025) மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது.
STORY | Kerala HC orders registration of criminal case in connection with Sabarimala gold issue
— Press Trust of India (@PTI_News) October 10, 2025
The Kerala High Court on Friday directed the state police to register a criminal case in connection with the "misappropriation of gold" from the "side frame or lintels" of the shrine… pic.twitter.com/3DR3Z4k9ye
என்ன பிரச்னை?
சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் தங்க தகடுகள் செப்புத் தகடுகளாக மாற்றப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
முன்னதாக இது குறித்து பேசிய பந்தளம் கொட்டாரம் நிர்வாக சங்க செயலாளர் எம்.ஆர். சுரேஷ் வர்மா, “1998 ஆம் ஆண்டு விஜய் மல்லையா சபரிமலைக்கு சமர்ப்பித்த தங்கத் தகடுகள் எவ்வாறு செப்புத் தகடுகளாக மாறியது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆன்மிக சுற்றுலா நகரமாக மாறும் கோவா? மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுமா? அமைச்சர் பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com