SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும் இணைந்தது.
SpaDeX docking experiment : ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வளர்ந்த நாடுகளின் உயரடுக்குக் குழுவில் இந்தியாவும் இணைந்தது.
Published on: January 16, 2025 at 4:03 pm
Updated on: January 16, 2025 at 10:05 pm
இஸ்ரோ ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனை | ஸ்பேடெக்ஸ் செயல்முறை பணி என்பது இஸ்ரோவின் ஒரு முக்கியமான திட்டமாகும். இது இரண்டு சிறிய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி விண்கல சந்திப்பு மற்றும் டாக்கிங் ஆகியவற்றிற்குத் தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி நிரூபிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழக்கிழமை (ஜன. 16, 2025) அதிகாலையில் ஸ்பேடெக்ஸ் டாக்கிங் பரிசோதனையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.
அந்த வகையில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு நான்காவது நாடாக இந்தியா இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
SpaDeX Docking Update:
— ISRO (@isro) January 16, 2025
Post docking, control of two satellites as a single object is successful.
Undocking and power transfer checks to follow in coming days.
#SPADEX #ISRO
இஸ்ரோ ஸ்பேடெக்ஸ் மிஷன் என்ன?
2024ஆம் ஆண்டு, டிசம்பர் மாத இறுதியில் இஸ்ரோ, PSLV-C60 மற்றும் புதுமையான பேலோடுகளில் விண்வெளி டாக்கிங் பரிசோதனை (SPADEX) மிஷனை ஏவியது.
இந்த மிஷன் இரண்டு சிறிய விண்கலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 220 கிலோ கொண்டது ஆகும்.
இரண்டு சிறிய விண்கலங்களை விண்கலம் சந்திப்பது இதன் முதன்மை நோக்கமாகும். மேலும், இணைப்பது மற்றும் அவிழ்ப்பது என தேவையான தொழில்நுட்பத்தை உருவாக்கி நிரூபிப்பதும் இந்த பணியின் நோக்கமாகும்.
இந்த நிலையில், பொதுவான விண்வெளி பயண நோக்கங்களை அடைய பல ராக்கெட் ஏவுதல்கள் தேவைப்படும்போது, டாக்கிங் தொழில்நுட்பம் அவசியம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com