Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கிறது.
Indian embassy to reopen in Afghanistan : ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றிய 4 ஆண்டுகளுக்குப் பிறகு, காபூலில் இந்தியா மீண்டும் தூதரகத்தைத் திறக்கிறது.
Published on: October 10, 2025 at 2:21 pm
Updated on: October 10, 2025 at 4:29 pm
புதுடெல்லி, அக்.10, 2025: காபூலில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடனான இருதரப்பு சந்திப்பின் போது தெரிவித்தார்.
தாலிபான்கள் நாட்டின் அரசாங்கத்தை கைப்பற்றிய பின்னர், ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களை இந்தியா மூடியது.
இதைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு தொழில்நுட்பக் குழுவை அனுப்பி இந்தியா தனது இராஜதந்திர இருப்பை நாட்டில் மீண்டும் நிலைநிறுத்தியது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தனது தொழில்நுட்ப பணியை இந்தியா இப்போது தூதரகமாக மேம்படுத்தும் என்று ஜெய்சங்கர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர்.
அதன் பின்னர், புது டெல்லியில் முத்தாகியுடனான இந்திய வெளியுறவு துறை அமைச்சரின் முதல் சந்திப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உலகின் ஸ்திரத்தன்மை.. காஸா அமைதி திட்டம்.. மோடி-ஸ்டார்மர் பேச்சு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com