India 76th Republic Day: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மிகப்பெரிய அணிவகுப்பு டெல்லியில் இன்று நடந்தது. முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
India 76th Republic Day: நாட்டின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மிகப்பெரிய அணிவகுப்பு டெல்லியில் இன்று நடந்தது. முன்னதாக தேசிய போர் நினைவு சின்னத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
Published on: January 26, 2025 at 11:14 am
Updated on: January 26, 2025 at 3:07 pm
2025 குடியரசு தின அணிவகுப்பு: இந்திய நாட்டின் 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக டெல்லியில் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது, நாட்டின் இராணுவ வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்திய ஆயுதப்படைகள் மற்றும் துணை ராணுவப் படைகளின் குழுவினர் இந்தியா கேட் மற்றும் தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு அருகிலுள்ள கர்தவ்ய பாதையில் அணிவகுத்துச் சென்றனர்.
இந்த அணிவகுப்பின் போது, 18 அணிவகுப்புப் பிரிவுகள், 15 இசைக்குழுக்கள் மற்றும் 31 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு தொடங்கும் முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கர்தவ்ய பாதையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு அணிவகுப்பு தொடங்கியது. தேசிய வணக்கத்துடன் தொடங்கிய அணிவகுப்பு 90 நிமிடங்கள் நீடித்தது.
இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
LIVE: Republic Day Parade – 2025 https://t.co/piqBmmPZQJ
— President of India (@rashtrapatibhvn) January 26, 2025
மேலும், இந்தோனேசியாவிலிருந்து ஒரு அணிவகுப்புக் குழுவும், ஒரு இசைக்குழுக் குழுவும் அணிவகுப்பில் பங்கேற்றன. இந்த அணிவகுப்பில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 16 அலங்கார ஊர்திகளும், மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 15 அலங்கார ஊர்திகளும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com