Govt School Teacher Shot Dead In Amethi | உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு வயது கைக்குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் இன்று (செப்.3, 2024) சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதான சுனில் மற்றும் அவரது மனைவி பூனம் (32) ஆவார். இவர்கள் பவானியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். சுனில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் அவர் உள்பட முழு குடும்பமும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, அமேதி காவல் கண்காணிப்பாளர் (SP) அனூப் குமார் சிங், “சுனில் ரேபரேலியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்ஹவுனாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். முதற்கட்ட விசாரணையில், சந்தன் வர்மா என்பவர் மீது 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இந்த ஈவ் டீசிங் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், “அமேதி மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.
துயரத்தின் இந்த நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
அகிலேஷ் யாதவ்
எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து யாராவது இருக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன….
Vaishno Devi Yatra route in Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் பலத்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் வரை உயிரிழந்துள்ளனர்….
Rahul Gandhi: 50 ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா; இது அவருக்கு எப்படி தெரியும்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்….
காங்கிரஸ், தி.மு.க அங்கம் வகிக்கும், இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்….
நாய் கடித்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் ரேபிஸ் நோய்க்கு ஆளாகி மரணத்தை தழுவியுள்ளார் நான்கே வயதான சிறுமி ஒருவர். இந்தக் கொடூரம் கர்நாடகா மாநலித்தில் நடந்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்