Firing attempt on Sukhbir Singh | சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் மீது, பொற்கோவிலுக்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்?
Firing attempt on Sukhbir Singh | சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் மீது, பொற்கோவிலுக்கு வெளியே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார்?
Published on: December 4, 2024 at 6:08 pm
Updated on: December 4, 2024 at 11:03 pm
Firing attempt on Sukhbir Singh | சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல். இவர் இன்று (டிச.4, 2024) பொற்கோவிலுக்கு வெளியே சேவகர் பணி செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் பாதல்-ஐ துப்பாக்கியால் சுட்டார். இதில் குறி தப்பியதால் பாதல் உயிர் பிழைத்தார். துப்பாக்கி தோட்டா அங்கிருந்த சுவற்றில் விழுந்தது. இந்த நிலையில், பாதல்-ஐ துப்பாக்கியால் சுட்டவர் நரேன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவரை அங்கிருந்தவர்கள் தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், குர்தாஸ்பூரில் உள்ள தேராபாபா நானக்கில் வசிக்கும் நரேன் சிங் சவுத்ரி ஆவார். அவர் தல் கல்சாவின் உறுப்பினராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், 2013 இல் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், நரேன் சிங் சவுத்ரிக்கு காலிஸ்தானி தொடர்புகள் உள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
#WATCH | Punjab: Bullets fired at Golden Temple in Amritsar where SAD leaders, including party chief Sukhbir Singh Badal, were offering 'seva'. The attacker, identified as Narayan Singh Chaura by the Police has been overpowered by the people and caught.
— ANI (@ANI) December 4, 2024
(Video Source: PTC News) pic.twitter.com/b0vscrxIL8
இதற்கிடையில், விசாரணைக்குப் பிறகு, மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி கிராமத்தில் உள்ள ஒரு மறைவிடத்தை போலீசார் சோதனை செய்தனர். அங்கு, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. முன்னதாக, நரேன் சிங் 2018 இல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும், பாகிஸ்தானில் இருந்தபோது, அவர் கொரில்லா போர் பற்றிய புத்தகத்தையும் எழுதியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், புரைல் ஜெயில்பிரேக் வழக்கில் நரேன் சிங்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சுக்பீர் சிங் மீதான துப்பாக்கிச் சுடுதல் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் நரேன் அவரை துப்பாக்கியால் சுடுவதை காணலாம்.
இதையும் படிங்க : தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com