மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.
Published on: November 20, 2024 at 10:50 pm
Exit Poll Results 2024 | மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு இன்று வாக்கு பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று (நவ.20, 2024, புதன்கிழமை) வெளியாகின.
இந்த முடிவுகளில், யார் வீட்டில் ஆளும் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
எனினும் ஜார்கண்டில் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக மேட்ரிக்ஸ் உள்ளிட்ட கருத்துக்கணிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல் மகாராஷ்டிராவிலும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா, ஏக்நாத் தரப்பிலான சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸுக்கு எதிராகவே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மகாராஷ்டிராவில் அமைந்தன. எனினும் சட்டப்பேரவை முடிவுகளின் போது காங்கிரஸ் வழக்கத்தை விட சிறப்பாக செயல்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com