Rahul Gandhi’s charge against CEC: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Rahul Gandhi’s charge against CEC: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Published on: September 18, 2025 at 2:08 pm
புதுடெல்லி, செப்.18, 2025: வாக்காளர் பெயர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் (EC) வியாழக்கிழமை (செப்.18,2025) “தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது” என்று நிராகரித்துள்ளது.
மேலும் தேர்தல் ஆணையம், “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை. ஸ்ரீ ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்களிப்பையும் ஆன்லைனில் நீக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.தொடர்ந்து, “பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கேட்கும் வாய்ப்பை வழங்காமல் எந்த நீக்கமும் நடைபெறாது” எனவும் குறிப்பிட்டுள்ளது.
என்ன பேசினார் ராகுல் காந்தி.
❌Allegations made by Shri Rahul Gandhi are incorrect and baseless.#ECIFactCheck
— Election Commission of India (@ECISVEEP) September 18, 2025
✅Read in detail in the image attached 👇 https://t.co/mhuUtciMTF pic.twitter.com/n30Jn6AeCr
முன்னதாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது காந்தி கடுமையான தாக்குதலைத் தொடங்கிய ராகுல் காந்தி, “அவர் வாக்கு மோசடி செய்பவர்களையும்” “இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களையும்” பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டினார்.கர்நாடகாவின் ஆலண்ட் மற்றும் மகாராஷ்டிராவின் ராஜுரா தொகுதிகளில் இருந்து நடந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி, தானியங்கி மென்பொருளைப் பயன்படுத்தி நாடு முழுவதும் வாக்காளர் நீக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பால் தாக்கரே மனைவி சிலை மீது பெயிண்ட் வீச்சு.. சிவசேனா கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com