Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார் டெல்லி சாமியார்.
Delhi baba Swami Chaitanyanand Saraswati case: ட்விட்டரில் பெண் ஒருவர் நான் பாகிஸ்தானி எனக் கூற, அதற்கு நான் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார் டெல்லி சாமியார்.
Published on: October 5, 2025 at 11:00 am
புதுடெல்லி, அக்.5, 2025: டெல்லி சாமியார் சுவாமி சைதன்யானந்த் சரஸ்வதி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், அவரது சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் எக்ஸ் கணக்கிலிருந்து பெண்கள் பதிவேற்றிய புகைப்படங்களில் தகாத, காதல் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கருத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக பெண் ஒருவர் தனது புகைப்படத்தை பதிவேற்றி நான் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு சாமியார் சைதன்யானந்த் சரஸ்வதி, நான் நியூயார்க் நகரை சேர்ந்தவர் எனப் பதிலளித்துள்ளார்.
மாணவிகள் புகார்
சாமியார் சைதன்யானந்த் சரஸ்வதி மீது மாணவிகள் ஏற்கனவே பாலியல் புகார் அளித்துள்ளனர். ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை-ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியான இவர் மீது அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், பார்த்தசாரதி என்ற இயற்பெயர் கொண்ட இந்த சாமியார் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இவர், ஐந்து நாள் போலீஸ் காவலுக்குப் பிறகு அவர் தற்போது 14 நாள் நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :பாடகர் ஜூபின் கார்க் மரணத்துக்கு என்ன காரணம்? விசாரணை ஆணையம் அமைத்த அரசு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com