ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து சம்பளம் பெறுகிறார் என செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
February 6, 2025
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து சம்பளம் பெறுகிறார் என செபி தலைவர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on: September 2, 2024 at 6:15 pm
Congress accuses SEBI chief | ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் இருந்து செபி தலைவர் மாதாபி பூரி பூச் (Madhabi Puri Buch) நிதி பெறுகிறார் என காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் இன்று (செப்.2, 2024) பேசிய காங்கிரஸின் மூத்தத் தலைவர் பவன் கெரா, “இந்தக் கோரிக்கையை முன்வைத்து, செபியின் 54வது பிரிவை மீறியதாகக் குற்றம் சாட்டி, பதவி விலகுமாறு மாதாபி பூரி பூச்-ஐ கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “செபியின் பங்கு, நடுத்தர வர்க்கத்தினர் உட்பட நாம் அனைவரும் நமது பணத்தை முதலீடு செய்யும் பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்துவதாகும்.
அதனால் செபி தலைவர் பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடங்கிய குழுவால் நியமிக்கப்படுகிறார். ஆனால் மாதாபி பூரி பூச், ஐ.சி.ஐ.சி.ஐ.யிடம் இருந்து நிதி பெற்றுளளார்” எனக் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக ட்விட்டர் எக்ஸ் தளத்தில் காங்கிரஸின் மற்றொரு மூத்தத் தலைவரான ஜெய் ராம் ரமேஷ், “அதானி குழுமத்தின் செக்யூரிட்டி சட்டங்களை மீறியது தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் உச்ச நீதிமன்றத்தின் கட்டாய விசாரணையில், செபி தலைவரின் நலன் முரண்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அமிர்தசரஸில் பயங்கர சப்தமாக வெடித்து சிதறிய ஆலை: 7 பேரின் கதி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com