Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
Jammu and Kashmir | Congress | ஜம்மு காஷ்மீரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
Published on: September 11, 2024 at 4:44 pm
Updated on: September 11, 2024 at 7:40 pm
Jammu and Kashmir | Congress | ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு 5 உத்தரவாதங்களை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதன்கிழமை (செப்.11, 2024) தெரிவித்தார்.
காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் பேசிய கார்கே, பெண் குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்குவதாகவும், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 11 கிலோ தானியங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மீட்டெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மேலும் பெண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடனும், குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
जम्मू-कश्मीर में पहले 11 किलो चावल मिलता था, आज केवल 5 किलो मिल रहा है।
— Congress (@INCIndia) September 11, 2024
इससे पता चलता है कि गरीबों का हमदर्द कौन है। कांग्रेस की सरकार फूड सिक्योरिटी बिल लेकर आई।
यही कांग्रेस और BJP में फर्क है। इसलिए मैं कहना चाहता हूं कि आप लोग सिर्फ भाषण देने वालों पर नहीं, काम करने वालों… pic.twitter.com/BIrsh5bjCr
தொடர்ந்து, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் பண்டிட் குடியேறியவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ்-என்சி அரசு நிறைவேற்றும் என்று கார்கே கூறினார்.
இதையடுத்து, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பெறுவார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
முன்னதாக, கார்கே தனது உரையில், பிஜேபி தலைமையிலான மத்திய அரசை இப்பகுதியில் ஒரு லட்சம் வேலை காலியிடங்களை நிரப்பத் தவறிவிட்டதாகவும், தொழில்துறை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை என்றும் விமர்சித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்கா சென்ற டி.கே. சிவக்குமார்; ராகுல் காந்தி உடன் சந்திப்பு: பேசியது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com