மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் சாய் வாலா கவனம் எடுத்து வருகிறார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் நாக்பூர் சாய் வாலா கவனம் எடுத்து வருகிறார்.
Published on: November 15, 2024 at 8:08 am
Maharashtra Election | மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை தக்க வைக்க, பாரதிய ஜனதா கூட்டணியும்; இழந்த ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் கங்கணம் கட்டி வேலை செய்கின்றன. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரவின் மகனும்; ராஜ் தாக்கரையின் மகனும் தனி தனி தொகுதிகளில் களம் காண்கின்றனர்.
இதில் ராஜ் தாக்கரேவின் மகனுக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாக்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது நாக்பூரில் சாய் வாலா என அழைக்கப்படும் டீக்கடைக்காரரும் கலந்து கொண்டார்.
இவர் தனது வித்தியாசமான திறமையால் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து இவர் தற்போது நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர்களைப் போல் பொது இடங்களில் கவுரவிக்கப்படுகிறார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்திலும் அவர் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பீகாரில் இடைத்தேர்தலை ஏன் ஒத்திவைக்கவில்லை? உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மனு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com