Kerala: கேரள மாநிலம் கோட்டயம், திருவாதுக்கல்லில் தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Kerala: கேரள மாநிலம் கோட்டயம், திருவாதுக்கல்லில் தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published on: April 22, 2025 at 5:09 pm
திருவனந்தபுரம், ஏப். 22 2025: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவத்துக்கலில் உள்ள வீட்டில் ஒரு தம்பதியினர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் திருநக்கராவில் உள்ள இந்திரபிரஸ்தம் ஆடிடோரியத்தின் உரிமையாளர் விஜயகுமார் மற்றும் அவரது மனைவி மீரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காலை 8:45 மணியளவில் வீட்டு வேலைக்காரர் வந்தபோது தம்பதியினரை இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார்.
இது தனிப்பட்ட பகை காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கருவியின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போயுள்ளது. இது, வழக்கில் மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. வணிகஸ்தராக இருந்த விஜயகுமார் பல நிறுவனங்களை நடத்தி வந்தார். சம்பவத்தின்போது தம்பதியும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
போலீசார் கூற்றுப்படி, கூரிய ஆயுதத்தால் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இருவரும் உடலில் துணியில்லாத நிலையில், இரண்டு வெவ்வேறு அறைகளில் கிடந்தனர். சம்பவ இடத்தில் வாளி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. விஜயகுமாரின் தலையில் பலத்த தாக்குதல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தெரிவித்தள்ள, கோட்டாயம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷாஹுல் ஹமீது இது கொலை வழக்கு என உறுதி செய்துள்ளார். கொள்ளை அல்லது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்ட உடைகள் எதுவும் இல்லாததால், இந்த கொலை தனிப்பட்ட பகை காரணமாக நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், வீட்டில் முந்தைய காலத்தில் வேலை பார்த்த ஒரு மைகிரேன்ட் தொழிலாளி மீது சந்தேகம் எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன், போன் திருட்டு சம்பவத்தையடுத்து அவரது நடத்தை சரியில்லாததால், விஜயகுமார் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளார். இதன் பின்னணியில் பிரச்சணை உருவானதாக அருகிலுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலாளி போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்த கருத்து தெரிவித்துள்ள கோட்டயம் மாவட்ட அமைச்சர் வி.என். வாசவன், இது ஒரு “மிகவும் கொடூரமான கொலை” என்றும், அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க ‘துப்பாக்கியை காட்டி குடும்பத்தினரை மிரட்டினார்’: முன்னாள் டி.ஐ.ஜி கொலை வழக்கில் மனைவி வாக்குமூலம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com