Brahmin group protests outside NEET exam centre: கர்நாடகாவின் கலபுராகியில் புனித நூலை அகற்றியதை கண்டித்து நீட் தேர்வு மையத்திற்கு வெளியே பிராமண அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Brahmin group protests outside NEET exam centre: கர்நாடகாவின் கலபுராகியில் புனித நூலை அகற்றியதை கண்டித்து நீட் தேர்வு மையத்திற்கு வெளியே பிராமண அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
Published on: May 4, 2025 at 6:08 pm
பெங்களூரு, மே 4 2025: கர்நாடகாவின் கலபுராகியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்திற்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை (மே 4 2025) பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வெழுத அனுமதிக்கப்படுவதற்கு முன்பு சில மாணவர்கள் தங்கள் புனித நூலை (ஜானிவரா) அகற்றச் சொன்னதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, செயிண்ட் மேரி பள்ளியில், ஸ்ரீபாத் பாட்டீல் என்ற மாணவர், தேர்வு மண்டபத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவரது புனித நூலை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பிராமணர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
பிராமணர்கள் போராட்டம்
இந்த நிலையில் இது தொடர்பான வீடியோக்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பிராமணர்கள் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிகிறது.
#WATCH | Karnataka: Members of the Brahmin community protest outside a NEET examination centre, located at St. Mary's School in Kalaburagi, after a candidate – Shripad Patil was made to remove his 'Janeu' (sacred thread) and then allowed to take the exam. pic.twitter.com/FK0AAPf6ag
— ANI (@ANI) May 4, 2025
தேசிய தேர்வு முகமை (NTA) மூலமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு தழுவிய அளவில் இளங்கலைப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2025 நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நேஷனல் ஹெலால்டு வழக்கு: ராகுல் காந்திக்கு நோட்டீஸ்.. அடுத்த விசாரணை எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com