BJP National Working President: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
BJP National Working President: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Published on: December 15, 2025 at 4:57 pm
புதுடெல்லி, டிச.15, 2025: பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழு, பீகார் மாநில அமைச்சர் மற்றும் ஐந்து முறை எம்.எல்.ஏ. ஆன நிதின் நபீனை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்சியின் தேசிய செயற்குழுத் தலைவராக நியமித்துள்ளது.
அமைப்புச் செயல்பாடுகளில் திறமையான தலைவராக பரவலாகக் கருதப்படும் நிதின் நபீன், தற்போது பீகார் மாநிலத்தின் பட்னா மாவட்டத்தில் உள்ள பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மேலும், நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசில் சாலை கட்டுமானத் துறையின் பொறுப்பையும் வகிக்கிறார்.
நிதின் நபீன், மூத்த பாஜக தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மறைந்த நபீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன் ஆவார். 45 வயதான இவர், கட்சியின் வரலாற்றில் இளம் செயற்குழுத் தலைவராகவும், பீகாரிலிருந்து இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பாஜக தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தெலங்கானா கிராம பஞ்சாயத்து தேர்தல்.. 85.86 சதவீத வாக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com